கோவையில் அடுத்தடுத்து வந்த வனவிலங்குகள்- பொதுமக்கள் அச்சம்- வீடியோ காட்சிகள் உள்ளே...

published 8 months ago

கோவையில் அடுத்தடுத்து வந்த வனவிலங்குகள்- பொதுமக்கள் அச்சம்- வீடியோ காட்சிகள் உள்ளே...

கோவை: கோவை மாவட்டம் தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பழனியப்பா லே-அவுட் பகுதியில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி நான்கு காட்டு யானைகள் இப்பகுதிக்கு வந்துள்ளது. 

இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து அங்கு வந்த  வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

யானைகளை விரட்டிய சிறிது நேரத்திலேயே அங்கு  ஒரு காட்டு பன்றியும் திடீரென வந்ததால் அங்கிருந்த தெரு நாய்கள் காட்டு பன்றியை துரத்தின. சிறிது நேரத்தில் அந்த காட்டு பன்றி வனப்பகுதிக்குள் சென்றது.

இஇப்பகுதியில் ஒரு வாரத்திற்கு முன்பு  சிறுத்தை ஒன்று கோழியை பிடித்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருந்த நிலையில் அடிக்கடி வனவிலங்குகள் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி இங்கு வருவதாகவும் வனத்துறையினர் இப்பகுதியில் கண்காணிப்பு பணிகளை தீவிர படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/bTNR_G2jnFk

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe