கோவை வருகிறார் முதலமைச்சர்!

published 8 months ago

கோவை வருகிறார் முதலமைச்சர்!

கோவை: தி.மு.க., சார்பில் கோவையில் நடைபெற உள்ள முப்பெரும் விழா நிகழ்ச்சிக்கு  முதலமைச்சர் ஸ்டாலின் கோவை வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தி.மு.க., கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், வடக்கு மாவட்ட செயலாளர் ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:

கடந்த 2019 ஆண்டு நாடாளுமன்ற் தேர்தலில் 39 தொகுதிகளில் மாபெரும்  வெற்றி பெற்றதையும்,
2021 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றிபெற்றதையும், 2021 உள்ளாட்சி தேர்தலில் சரித்திர வெற்றி பெற்றதையும், 
2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் 40க்கு 40தொகுதிகளில் வெற்றியையும் கொண்டாடும் விதமாக வருகின்ற ஜூன் 15 மாலை 4 மணியளவில், கோவை கொடிசியா மைதானத்தில் முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது.

இவ்விழாவில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று வாழ்த்துரை வழங்கி நன்றி தெரிவித்து சிறப்புரை நிகழ்த்துகிறார்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகள், தமிழ்நாடு வீட்டு வசதித்துறை நகர்ப்புற வளர்ச்சித் துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில், அனைத்து கழக நிர்வாகிகள் செயல்வீரர்கள்,கழக செயல் மறவர்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe