தொடர் சரிவு; இன்றும் குறைந்தது தங்கம் விலை!

published 8 months ago

தொடர் சரிவு; இன்றும் குறைந்தது தங்கம் விலை!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

நடப்பு ஆண்டின் தொடக்கத்திலேயே தங்கம் விலை உச்சத்தை எட்டி வரலாற்றில் இடம் பிடித்தது. ஜனவரியின் தொடக்கத்தில் தங்கம் ஒரு கிராம் ரூ.5910க்கு விற்பனை நிலையில், தற்போது ரூ.6,630 என விலையேறியுள்ளது.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் தங்கம் விலை, இன்னும் எகிறியது. இதனால் மக்கள் கவலையடைந்தனர்.

இதனிடையே இந்தியாவில் தேர்தல் முடிந்த நிலையில், சீனர்கள் தங்கத்தை குவித்து வந்ததை நிறுத்திய நிலையில் தங்கம் விலை சரிவை சந்தித்து வருகிறது.

ஜூன் மாத தொடக்கத்தில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.6710 ஆக இருந்தது. தொடர்ந்து கடந்த 6ம் தேதி கிராம் ரூ.6,800ஆக அதிகரித்தது. 7ம் தேதி கிராமுக்கு ரூ.40 மீண்டும் அதிகரித்து ஒரு கிராம் ரூ.6840க்கு விற்பனையானது.

இந்த சூழலில் கடந்த 8ம் தேதி பவுனுக்கு ரூ.1,520 அதிரடியாக விலை குறைந்தது.

இதனிடையே தங்கம் விலை இன்று மீண்டும் சரிவை சந்தித்துள்ளது.

தமிழகத்தில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.6,630க்கும் ஒரு பவுன் ரூ.53,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.128 விலை குறைந்து ஒரு கிராம் ரூ.5431க்கும், பவுன் ரூ.43,448க்கும் விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளி 20 பைசா விலை அதிகரித்து, கிராம் ரூ.96.20க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.96,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe