240 பெற்றது மோடிக்கு வெற்றி இல்லை தோல்வி- கோவையில் மு.க.ஸ்டாலின் உரை...

published 8 months ago

240 பெற்றது மோடிக்கு வெற்றி இல்லை தோல்வி- கோவையில் மு.க.ஸ்டாலின் உரை...

கோவை: திமுகவின் முப்பெரும் விழா கோவை கொடிசியா மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் உரையாற்றிய திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின்,
கடந்த முறை கோவைக்கு வந்து பங்கேற்ற கூட்டம், இந்தியா முழுவதும் ட்ரெண்டானது என குறிப்பிட்டார். 

அந்த கூட்டத்திற்கு வந்த ராகுல், ஓர் இனிப்பை கொடுத்து மனதை வென்றார் எனக் கூறிய அவர் ,அதுவே மக்களவை தேர்தல் வெற்றியின் முதல் இனிப்பு என்றார்.40 நமதே என்ற நம்பிக்கை தனக்கு முதலிலேயே இருந்தது என்று கூறிய அவர் ,அதற்கு  கொள்கையை குறிக்கோளாகக் கொண்ட மக்கள் தான் காரணம் என்றார்.


 

இந்த வெற்றி விழா தனிப்பட்ட ஸ்டாலினுக்கு நடைபெறும் பாராட்டு விழா அல்ல எனக் குறிப்பிட்ட மு க ஸ்டாலின், அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் நடத்தப்படும் பாராட்டு விழா  இது என பெருமைப்படுத்தினார்.
இந்தப் பாராட்டு விழாவை தொண்டர்களாகிய உங்களுக்கு காணிக்கையாக வழங்குவதுடன் ,தமிழக அரசின் மேல் நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு கிடைத்த வெற்றி இது எனக் குறிப்பிட்டார்.
ஊடகங்கள், பாஜக 400 இடங்களில் வெற்றிபெறும் என கருத்துக்கணிப்பை கூறினார்கள். ஆனால் அதனை உடைத்து நாம் தமிழகத்தில் 40க்கு 40 வென்றுள்ளோம் என்றார்.
 

நாம் அடைந்த வெற்றி திராவிட மாடல் அரசு மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை கிடைத்த வெற்றி எனவும், தொடர் வெற்றிக்கு காரணம் கூட்டணி ஒற்றுமை தான் இதற்கு அச்சாணி என்றார். கூட்டணி தலைவர்களுடன்  தேர்தல் உறவு மட்டும் கிடையாது, கொள்கை உறவு தான் இந்த வெற்றிக்கு காரணம் என்றார்.
இந்தியா கூட்டணி இணைந்து தேர்தலை சந்திக்க தயாரான போது, கட்சிகளை ஒன்று சேரவிடாமல் தடுக்க, பாஜக பல தடங்கல்களை ஏற்படுத்தியது என கூறினார். ஐடி ,இடி  ரைட் சோதனை நடத்தி பலரையும் கைது செய்து, பாஜக அரசு  மிரட்டியதாக தெரிவித்தார். பல கோடி ரூபாய் செலவில் , பொய் செய்திகளை சமூக ஊடங்களில் பரப்பினார்கள். இருப்பினும் தற்போது அவர்களுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றார்.
 

பாஜகவுக்கு எதிராக 237 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் நுழைந்திருப்பதால், பாஜகவால் மக்கள் விரோதமான சட்டங்கள் எதுவும் இயற்ற முடியாது என தெரிவித்தார். 40 எம்பிக்களும் கருத்துக்களால் பாஜகவின் ஆணவத்தை சுடுவார்கள் எனக் கூறிய அவர் , மக்களுக்கான குரல் நாடாளுமன்றத்தில் வலுவாக ஒலிக்கும் என்றார். சமூக நீதிக்காக கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் அதிகமான குரல் எழுப்பியது தமிழக எம்பிக்கள் என தெரிவித்தார்.
ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, 40 எம்பிக்களின் செயல்பாடு இருக்க வேண்டும் என புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கு அறிவுரை வழங்கினார்.
 

தமிழக உரிமைக்காக நாடாளுமன்றத்தில் உரக்க பேசுங்கள் என கேட்டுக்கொண்ட அவர், வாக்களித்த மக்களுக்கு உண்மையாக, வாய்ப்பு வழங்கின கட்சி தலைமைக்கு உண்மையாக நடந்து, தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என துடிக்கின்ற பாஜகவிற்கு தடுப்பு அரணாக நமது எம்பிகள் இருக்க வேண்டும் என்றார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், சட்டசபை தொகுதி வாரியாக பார்த்தால் 221 தொகுதிகளில் திமுக முன்னிலையில் வகித்துள்ளது என்றும், அடுத்து வரக்கூடிய 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் திமுக வெல்லும் என தெரிவித்தார். 240 பெற்றது மோடிக்கு வெற்றி இல்லை தோல்வி.

எங்களை நம்பி பொறுப்புகளை கொடுத்திருக்கும் மக்கள் நம்பிக்கை வீண் போகாது என்ற அவர், மக்களுக்காகவே எங்கள்  உழைப்பு இருக்கும், அதுவே எங்களது கடமை. இதுதான் மக்களுக்கு நாம் காட்டும் நன்றி என்றார்.

திமுகவின் முப்பெரும் விழாவில்,  தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பாலகிருஷ்ணன், மதிமுக எம்பி துரை வைகோ, உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe