கும்பிட்ட முதியவர்; விரட்டி தாக்கிய யானை- சிசிடிவி வீடியோ காட்சிகள் உள்ளே….

published 8 months ago

கும்பிட்ட முதியவர்; விரட்டி தாக்கிய யானை- சிசிடிவி வீடியோ காட்சிகள் உள்ளே….

கோவை: கோவை மருதமலை அருகே சாலையில் நடந்து சென்றவரை காட்டு யானை, விரட்டி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை மாவட்டத்தில் அவ்வப்போது யானை மனித மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இதனிடையே ரெப்ரீஸ் காலனி நாச்சியார்மடம் அருகே கடந்த 15ம் தேதி அதிகாலை 3 மணியளவில், அப்பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (72) என்ற நபர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவ்வழியாக வந்த காட்டு யானை சிவசுப்பிரமணியத்தை விரட்டி தாக்கியது. இந்த தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள்  தற்போது வெளியாகி மருதமலை சுற்றுவட்டார பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

சிசிடிவி காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்….

https://youtu.be/aQVfgvwO7uU

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe