TNPSC Group 2 & 2A தேர்வு: 2327 பணியிடங்கள் அறிவிப்பு!

published 8 months ago

TNPSC Group 2 & 2A தேர்வு: 2327 பணியிடங்கள் அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டிற்கான டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 2ஏ தேர்விற்கான அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம்  2,327 காலிப்பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படவுள்ளன.

பணியிடங்கள்

குரூப் 2 - உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், சார் பதிவாளர் நிலை II,தனிப்பிரிவு உதவியாளர், வனவர் உள்ளிட்ட 507 பணியிடங்கள்,

குரூப் 2ஏ -  உதவி ஆய்வாளர், உதவியாளர், வருவாய் உதவியாளர், கணக்கர் உள்ளிட்ட 1,820 காலிப்பணியிடங்கள்  நிரப்பப்படவுள்ளது.

கல்வி

இந்த பணியிடங்களுக்கு கலை, அறிவியல், வணிகவியல், சட்டம், கணினி அறிவியல், கணினி பயன்பாடு, வங்கி மேலாண்மை ஆகிய படிப்புகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள்  கல்வித்தகுதிக்கு ஏற்ப  விண்ணப்பம் செய்யலாம்.

மேலும் சில பணியிடங்களுக்கு  தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வில்  தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.
முழுமையான கல்வித்தகுதி விவரங்களை அறிந்து கொள்ள  விண்ணப்பத்தை படித்து பார்க்கவும்.

தேர்வு

குரூப் 2  - முதல்நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகதேர்வு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும்.

குரூப் 2 ஏ - முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும்.

எப்படி விண்ணப்பிப்பது?

https://www.tnpsc.gov.in/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இந்த தேர்வுக்கு 19.07.2024 வரை  விண்ணப்பிக்கலாம். தேர்வு நடைபெறும் நாள் 14.09.2024 ஆகும்.

மேலும் விவரம்

வயது வரம்பு, கல்வி தகுதி உள்ளிட்ட தேவையான விவரங்களை அறிய https://www.tnpsc.gov.in/ என்ற இணையதள பக்கத்தை காணவும். அறிவிப்பை நன்கு படித்து விட்டு விண்ணப்பம் செய்யவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe