குப்பை இல்லாத கோவை; 2 நாள் பயிலரங்கில் கலந்துகொள்ள வேண்டுமா?

published 8 months ago

குப்பை இல்லாத கோவை; 2 நாள் பயிலரங்கில் கலந்துகொள்ள வேண்டுமா?

கோவை: குப்பையில்லாத கோவை என்ற தலைப்பில் ஹிந்துஸ்தான் கல்லூரியில் 2 நாள் பயிலரங்கம் நடைபெற உள்ளது.

கோவை மாவட்டத்தில் 'ராக்' தன்னார்வ அமைப்பு சார்பில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே குப்பை இல்லாத கோவை என்ற தலைப்பில், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை குறித்த இரண்டு நாள் பயிலரங்கம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இந்த இரன்டு நாள் பயிலரங்கில் நடிகர் அமீர்கானின் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி புகழ், வேலூர் சீனிவாசன் கலந்து கொண்டு கழிவுகள் மேலாண்மை குறித்து உரையாற்றி அதற்குரிய பயிற்சிகளை வழங்க உள்ளார்.

துறையில் 25 வருட விரிவான அனுபவம் பெற்ற இவர் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு பயணித்துள்ளார். இந்த பயிலரங்கில் கலந்து கொள்ள ரூ.500 சேவைக் கட்டணம் நிர்ணைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாள் பயிலரங்கில் கலந்து கொள்வோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

பங்கேற்க முன்பதிவு அவசியம், பின்வரும் லிங்க் மூலம் முன்பதிவு செய்து கொள்ள கோவை வாசிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்: https://forms.gle/qWmSCWCDwg2daqop8

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe