கோவை விமான நிலையத்தில் பணியாற்றிய48 ஒப்பந்த தூய்மை பணியாளர்களை சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்து விட்டார்கள்- ஆட்சியரிடம் புகார்…

published 7 months ago

கோவை விமான நிலையத்தில் பணியாற்றிய48 ஒப்பந்த தூய்மை பணியாளர்களை சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்து விட்டார்கள்- ஆட்சியரிடம் புகார்…

கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 10 ஆண்டுக்கு மேலாக 48 நபர்கள் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தனர்.பணிபுரியும் பணியாளர்கள் பட்டியல் மற்றும் பழங்குடி மற்றும் மிகவும் பிற்படுத்தோர் குடும்பத்தை சார்ந்தவர்கள்.ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்த குறைந்தபட்ச கூலி ரூபாய் 745 வழங்கப்படுகிறது.

ஆனால் ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம் வெறும் ரூபாய் 546 மட்டுமே கூலி வழங்க வந்தது.இது இது குறித்து ஒப்பந்தம் நிறுவனத்திடம் கேட்டபோது எந்தவித காரணமும்,அறிவிப்பும் இன்றி 45 வயதை கடந்து விட்டதாக கூறி 48 தொழிலாளர்களை எந்தவிதமான முன்னறிவிப்பு இன்றி பணியில் இருந்து நீக்கி விட்டனர்.

கூலி,பணிக்கொடை,ESI,PF உள்ளிட்டு பணப் பயன்கள் தொகை வழங்காமல் காரணமின்றி தீடிரென பணியில் இருந்து நீக்கிவிட்டதால் வீட்டு வாடகை செலுத்த முடியாமலும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவிட்டனர்.
அதனை ரத்து செய்ய வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe