கோவை மாவட்ட திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, காப்பீட்டு திட்ட அட்டைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்...

published 7 months ago

கோவை மாவட்ட திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, காப்பீட்டு திட்ட அட்டைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்...

கோவை: கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று  நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி  பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, உட்பட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை,
வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அளித்தனர். 

பொதுமக்களிடமிருந்து இலவச வீடு வேண்டி 105 மனுக்களும், வீட்டுமனைப் பட்டா வேண்டி 215 மனுக்களும், வேலைவாய்ப்பு வேண்டி 7 மனுக்களும், 280 இதர மனுக்கள் என மொத்தம் 607 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர்  சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு
உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 52 திருநங்கைகளுக்கு மாநில அடையாள அட்டைகளையும், 22 திருநங்கைகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe