வெளிநாட்டில் வைப் பண்ணும் சமந்தா!

published 7 months ago

வெளிநாட்டில் வைப் பண்ணும்  சமந்தா!

நடிகை சமந்தா தனது வெளிநாட்டு பயணத்தின் போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

சமந்தா  தமிழ்,   தெலுங்கில்  பல  முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து  வெற்றி படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து  மலையாளத்தில்   மம்முட்டியுடன் ஒரு படத்தில் இணைய உள்ளார். அதே போல பாலிவுட்டில் ஷாருக்கானுடனும் நடிகை சமந்தா  நாயகியாக இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  இந்தப் படத்தின்  சூட்டிங்  விரைவில் துவங்கப்பட உள்ளது.

இவர், பிரபல தெலுங்கு நடிகர் நாகசைத்தன்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில்,  மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். 

மேலும் சமந்தாவிற்கு மயோசிட்டிஸ் என்ற அரிய வகை நோய் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்து வந்தார். இதனால்  சினிமாவில் நடிப்பதில் இருந்து  ஒரு ஆண்டு பிரேக் எடுத்தார். தற்போது மீண்டும் படங்களில்  நடிப்பதற்கு  கவனம் செலுத்தி உள்ளார்.

சமூக வலைதளங்களில் சமந்தா தொடர்ந்து ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி போட்டோ ஷூட் படங்களை பதிவிடுவார்.  தற்போது வெளிநாட்டில்  விடுமுறை கொண்டாட்டத்திற்கு சென்றுள்ளார்.  தான் தங்கியுள்ள இடத்தில் புகைப்படம், இயற்கை காட்சி, வெளிநாட்டு வீதிகள் போன்றவற்றை வெளியிட்டு ரசிகர்களை  ஈர்த்து வருகிறார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe