இந்திய கடற்படையில் வேலை: விண்ணப்பிக்க தகுதி என்ன?

published 7 months ago

இந்திய கடற்படையில் வேலை: விண்ணப்பிக்க தகுதி என்ன?

இந்திய கடற்படையில் சைலர் பிரிவில் திருமணமாகாத ஆண்கள், பெண்கள் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இந்த பணியிடங்கள்  விளையாட்டு கோட்டாவின் கீழ்  நிரப்பப்பட உள்ளது.

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியுடைய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் நபர்கள்  Petty Officers, Chief Petty Officers ஆகிய பதவிகளுக்கு நேரடியாக நியமனம்  செய்யப்படுவர்.  

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  சம்பந்தப்பட்ட விளையாட்டு பிரிவில் ஜூனியர், சீனியர் அளவில் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். பணிக்கான வயது வரம்பு, தகுதிகள்,  உடற்திறனுக்கான அடிப்படை தகுதி குறித்து அறிவிப்பில் கொடுக்கபட்டுள்ளது. திறன் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்படும்.  

https://www.joinindiannavy.gov.in/ என்ற இணையத்தளத்தில்  உள்ள  விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து, தகுந்த ஆவணங்களுடன் இணைத்து  தபாலில் அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 20.7.2024 ஆகும்.

அனுப்ப வேண்டிய முகவரி : The Secretary, Indian Navy Sports Control Board, 7th floor,
Chankya Bhavan Naval Headquarters, Ministry Of Defence, New Delhi - 110 021.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe