சூர்யா நடிக்கும் 'கங்குவா'... ரிலீஸ் தேதி குறிச்சாச்சு!

published 7 months ago

சூர்யா நடிக்கும் 'கங்குவா'...  ரிலீஸ் தேதி குறிச்சாச்சு!

நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தின் திரையரங்கு ரிலீஸ் எப்போது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் சூர்யா  10  வித்யாசமான கதாபாத்திரங்களில்  நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
படம் வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ளது. மேலும் படம் சர்வதேச அளவில் 10 மொழிகளில் ரிலீசாக உள்ளதாகவும், ஓ.டி.டி.,யில் 20 மொழிகளில் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.  

சூர்யாவின் 'கங்குவா' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது | Kanguva First look  poster - hindutamil.in

கங்குவா திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர்.  படத்தின் சூட்டிங் சில மாதங்களுக்கு முன்னரே நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்  தற்போது  விறுவிறுப்பாக நடக்கின்றன. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.  இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம்  தயாரித்துள்ளது.

தி கிங் அரைவ்ஸ்.. "கங்குவா" படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிடும்  படக்குழு | Tamil cinema kanguva movie glimpse video releasing tommorow

மேலும் கங்குவா படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி, குறுகிய நேரத்தில் பலக் கோடி பார்வைகள் பார்த்து பெரும் வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் இடையே படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் படத்தின் வெளியீடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும்  அக்டோபர் 10 அன்று  ஞானவேல் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் வேட்டையன்  படமும் வெளியாகிறது.  அதே நாலில் சூர்யாவின் கங்குவா திரைப்படமும் வெளியாகிறது.  இதனால் இரண்டு படங்களிடையே மிகப்பெரிய போட்டி ஏற்படும் என தெரிகிறது.  

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe