கோவையில் நடைமேம்பாலம்; மாநகராட்சி ஆணையர் ஆய்வு!

published 7 months ago

கோவையில் நடைமேம்பாலம்; மாநகராட்சி ஆணையர் ஆய்வு!

கோவை: கோவையில் உள்ள முக்கிய சாலைகளில் நடைமேம்பாலம் அமைப்பது தொடர்பாக மாநராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து மாநிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்குட்பட்ட லட்சுமி மில் சாலை சந்திப்பு பகுதியில் மேம்பாலம் அமைந்துள்ள இடத்தில் பொதுமக்கள் சாலையை கடந்து செல்லும் வகையில் சாலை நடைமேம்பாலம் அமைப்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

உக்கடம் அருகில் மேம்பாலம் அமைந்துள்ள இடத்திலும், காந்திபுரம் நகர பேருந்து நிலையம் அருகிலும் பொதுமக்கள் சாலையை கடந்து செல்லும் வகையில் சாலை நடைமேம்பாலம் அமைப்பது தொடர்பாகவும் ஆய்வு நடத்தினார்.

இதேபோல், உக்கடம் பேருந்து நிலையத்தில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின் போது மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், கூடுதல் காவல் ஆணையர் ரவிச்சந்திரன், உதவி ஆணையர் செந்தில்குமரன், செயற்பொறியாளர் கருப்பசாமி, நகரமைப்பு அலுவலர் குமார், உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe