தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேசிய புள்ளியியல் தின விழா…

published 7 months ago

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேசிய புள்ளியியல் தின விழா…

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம். இயற்பியல் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பாக தேசிய புள்ளியியல் தின விழா நடைப்பெற்றது.

புள்ளியியல் வினாடி வினா போட்டி மூன்று சுற்றுகள் மூலம் 100 பங்கேற்பாளர்களைக் கொண்ட 50 அணிகளிலிருந்து மூன்று அணிகள் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.

வருகை தந்த பிரதிநிதிகளை புள்ளிவிவரங்கள் பேராசிரியர் முனைவர் விஜயபாமா வரவேற்றார். வேளாண் பொறியியல் முதல்வர் முனைவர் ரவிராஜ் தனது சிறப்புரையில், நமது அன்றாட வாழ்விலும் ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளிலும் வெளியீடுகளிலும் புள்ளிவிபரத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

முதன்மை விருந்தினராக, புள்ளியியல் துறை துணை இயக்குநர் அமுதவல்லி, புள்ளியியல் துறையில் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை மேற்கொள்ள ஊக்கப்படுத்தினார். தரவு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள செயல்முறை மற்றும் நாடு தழுவிய தரவுத்தளத்தை (https://tn.data.gov.in/) உருவாக்குவதையும் அதின் முக்கியத்துவத்தையும் அவர் விவரித்தார்.

பல்வேறு துறைகளில் புள்ளி விவரங்களின் நோக்கம் மற்றும் முக்கியத்துவத்தை
விளக்கினார்.

இறுதியாக, இணைப் பேராசிரியர் முனைவர் கங்கைச் செல்வி நன்றியுரையுடன்
நிகழ்வு நிறைவுற்றது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe