காமராஜர் பிறந்தநாள் மாநாடு... கோவையில் அறிவித்த ஜி.கே.வாசன்!

published 7 months ago

காமராஜர் பிறந்தநாள் மாநாடு... கோவையில் அறிவித்த ஜி.கே.வாசன்!

கோவை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 122வது பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 14-ம் தேதி திருச்சியில் தா.ம.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

கோவை சித்ரா பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மேற்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் பேசுகையில்,

"மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 122வது பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 14-ம் தேதி திருச்சியில் தா.ம.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

காமராஜர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி தொடர்பாக தென் மண்டலத்தை தொடர்ந்து, மேற்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவையில் இன்று நடைபெற்றது.

இந்த மண்டலத்தில் இருந்து அதிக அளவில் பெரும் தலைவர் காமராஜர் விழாவை சிறப்பிக்க பங்கேற்க வேண்டும் என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

பெரும் தலைவர் காமராஜர் தின நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கலந்துகொள்வது சிறப்பான ஒன்று." என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe