கஞ்சா சாக்லேட் வழக்கு- கோவையில் 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது...

published 7 months ago

கஞ்சா சாக்லேட் வழக்கு- கோவையில் 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது...

கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலைய பகுதியில் 9 கிலோ கஞ்சா சாக்லேட்டை  விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் அபிஷேக் டோரா(30) மற்றும் அபிஷித் டோரா (27) ஆகியோர் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர்  கிராந்தி குமார் பாடி,  இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

அவ்வுத்தரவின் அடிப்படையில்  கஞ்சா சாக்லேட் வழக்கு‌ குற்றவாளிகளான அபிஷேக் டோர, மற்றும் *
அபிஷித் டோரா  ஆகியோர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

இந்த வருடத்தில் இதுவரை கோவை மாவட்டத்தில் 35 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது பகுதிகளில் இதுபோன்ற குற்ற செயலில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க 94981-81212 மற்றும் வாட்ஸ் அப் எண்  7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe