திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை!

published 7 months ago

திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை!

கோவை: திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.   இந்த சிறப்பு ரயில்களின் சேவை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
·         ரயில் எண்.06030 திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் (07.07.2024 முதல் 28.07.2024 வரை) இரவு 7 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும்.

·         ரயில் எண்.06029 மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து (8.07.2024 முதல் 29.07.2024 வரை) திங்கட்கிழமைகளில் இரவு 7.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

வகுப்புகள்:  ஏசி 2-அடுக்கு, ஏசி 3-அடுக்கு, ஸ்லீப்பர் வகுப்பு, பொது இரண்டாம் வகுப்பு & லக்கேஜ்-கம்-பிரேக் வேன் கோச்சுகள்.

நிறுத்தங்கள்:  சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலையாச்சிப்பேட்டை, கோயம்புத்தூர், பொள்ளாச்சிப்பேட்டை.

இவ்வாறு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe