பள்ளி மாணவர்களே இலக்கிய போட்டிகளுக்கு தயாராகுங்கள்...

published 7 months ago

பள்ளி மாணவர்களே இலக்கிய போட்டிகளுக்கு தயாராகுங்கள்...

கோவை: தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு" எனப் பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான சூலை 18ஆம் நாளினை தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டிகளை நடத்தி, போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல்பரிசு ரூ.10000/- இரண்டாம்பரிசு ரூ.7000/- மூன்றாம்பரிசு ரூ.5000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கபட உள்ளன.

அவ்வகையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 10.07.2024 அன்று காலை 9.00 மணிக்கு கோயம்புத்தூர், நகர்மண்டபம், புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளன.

கட்டுரைப்போட்டி

1 . ஆட்சிமொழித் தமிழ்

பேச்சுப்போட்டி

1. குமரித்தந்தை மார்சல் நேசமணி

2. தென்னாட்டு பெர்னாட்ஷா அண்ணா பேரறிஞர்

3. முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி

அப்போட்டிகளுக்கு மாவட்டத்தில் உள்ள கல்வி மாவட்டத்திற்கு ஒரு போட்டிக்கு 30 பேர் வீதம் இரண்டு கல்வி மாவட்டத்திற்கு 60 பேர் என இரண்டு போட்டிகளுக்கு (கட்டுரை 60 பேர், பேச்சுப்போட்டி- 60 பேர்) 120 பேரைத் தெரிவுசெய்து மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுப்பி வைக்கவேண்டும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe