சூலூரில் கலைஞரின் கனவு திட்ட பயனாளிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு...

published 7 months ago

சூலூரில் கலைஞரின் கனவு திட்ட பயனாளிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு...

கோவை: சூலூர் வட்டம், பீடம்பள்ளி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் பயனாளிகள் மற்றும் இடம் தேர்வு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்  நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், பீடம்பள்ளி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் பயனாளிகள் மற்றும் இடம் தேர்வு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி  நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக எஸ்ஐஎச்எஸ் காலனியில் ரயில்வே மேம்பாலம் கட்டு பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர்  மேம்பாலப்பணிகளை இரண்டு மாத காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் இல்லையெனில், ஒப்பந்ததாரர் மீது மேல்நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என எச்சரித்தார்.

அதனைத் தொடர்ந்து, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படும் என்று  தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள்.
அதாவது, ஊரகப்பகுதியில் உள்ள குடிசைகளை மாற்றி, அனைவருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். அதன்படி, குடிசையில் வசிப்பவர்கள், சேதமடைந்த வீடுகளில் வசிப்பவர்கள், பட்டா இருந்தும் சொந்தமாக வீடு இல்லாதவர்கள் என ஏழை, எளிய மக்களை கண்டறிந்து அவர்களுக்கு ஊரக வளர்ச்சி முகமை மூலமாக பாதுகாப்பான வீடுகள் கட்டி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வீடும் 360 சதுர அடி பரப்பளவில், அறை, சமையலறை. கழிப்பறை வசதிகளுடன் ரூ.3.50 இலட்சம் செலவில் அமைக்கப்படவுள்ளன.

அதன்படி, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் சூலூர் வட்டாரத்தில் 16 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் பீடம்பள்ளியில் ஒரு பயனாளியும், பட்டணத்தில் 3 பயனாளிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து இன்று பீடம்பள்ளி ஊராட்சி, நடுப்பாளையம் கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் முருகன், சரஸ்வதி, தங்கம்மாள் ஆகியோர் பயனாளிகளாக தேர்வு செய்தல் மற்றும் இடம் தேர்வு தொடர்பாக மாவட்ட  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe