கோவையில் பாணிபூரி கடைகளில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்- பொதுமக்கள் புகார் தெரிவிக்க செயலி அறிவிப்பு...

published 7 months ago

கோவையில் பாணிபூரி கடைகளில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்- பொதுமக்கள் புகார் தெரிவிக்க செயலி அறிவிப்பு...

கோவை: தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவின் பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி  அறிவுறுத்தலின் படி, மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன்  தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய 10 குழுக்களாக பிரிக்கப்பட்டு கோயம்புத்தூர் மாநகரின் பல பகுதிகளில் காந்திபுரம், V.O.C பூங்கா, காந்தி பார்க், ஆர்.எஸ்.புரம், பீளமேடு மற்றும் சித்ரா, சிங்காநல்லூர், கணபதி சாய்பாபா காலனி, சரவணம்பட்டி, வடவள்ளி, டவுன் ஹால், இராமநாதபுரம், உக்கடம், சுந்தராபுரம், குனியமுத்தூர் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், மதுக்கரை, பொள்ளாச்சி, வால்பாறை மேட்டுப்பாளையம், அன்னூர், துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் போன்ற மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பாணிபூரி விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பாணிபூரி தயாரிக்கப்படும் இடங்கள், துரித உணவு, Chaat Item விற்பனை செய்யும் தள்ளுவண்டி கடைகள் தொடர்ந்து கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, அக்களஆய்வின் போது கண்டறிந்த குறைகளை சரிசெய்யும் பொருட்டு நோட்டீஸ் கொடுத்தல் மற்றும் கள ஆய்வு அபராதம், உணவு மாதிரிகள் எடுத்தல் போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் இத்தொடர் கள ஆய்வில் இதுவரை 73 கடைகளை ஆய்வு செய்ததில், 16 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டும், 4 உணவு மாதிரிகளும், தமிழ்நாடுஅரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் உபயோகித்திற்காக 6 கடைகளுக்கு அபராதமாக ரூ.12000/- விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாணிபூரி
விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பாணிபூரி தயாரிக்கப்படும் இடங்களில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் 73 சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் நான்கு தயாரிப்பு இடங்களில் அதிக கலர் நிறமி சேர்க்கப்பட்ட 65 லிட்டர் பாணிபூரி மசாலா 57 கிலோ தரமற்ற உருளைக்கிழங்கு காளான் 5 கிலோ மற்றும் 19 கிலோ உருளைக்கிழங்கு மசாலா, செய்திதாள்களை பயன்படுத்தி பறிமாறப்பட்ட பஜ்ஜி, போண்டா போன்ற உணவு பொருட்கள் மற்றும் அதிக நிறமி சேர்க்கப்பட்ட சிக்கன் 65, காளான் மசாலா போன்ற 15 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு சுமார் ரூ.28,200/- ஆகும்.

அதில். நான்கு உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவு பரிசோதனைக்காக உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் இக்கள ஆய்வு தொடர் நடவடிக்கையாக மேற்கொள்ளப்படும்.

மேலும் பொது மக்கள் மிகுந்த கலர் நிறமி சேர்க்கப்பட்ட மற்றும் சரியான முறையில் பராமரிக்கப்படாத சுகாதாரமான மற்றும் தரமான முறையில் தயாரிக்கப்படாத பாணிபூரி விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பாணிபூரி தயாரிக்கப்படும் இடங்கள், சில்லி சிக்கன் கடைகள், துரித உணவு கடைகள், Chaat Item விற்பனை செய்யும் தள்ளுவண்டி கடைகள் கண்டறியப்பட்டால் 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். மேலும் Google Play store-இருந்து உணவு பாதுகாப்பு துறையின் tnfoodsafetyconsumer App என்ற செயலினை பதிவிறக்கம் செய்து புகார் செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe