இந்திய விமானப்படை தேர்வு- விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு...

published 7 months ago

இந்திய விமானப்படை தேர்வு- விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு...

கோவை: அக்னி வீர் வாயு இந்திய விமானப்படை தேர்வு இணையதளம் வாயிலாக
18.10.2024 முதல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு
விண்ணப்பிக்கும் தேதி 08.072024 முதல் 28.07.2024 வரை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்வித் தகுதி-12 ஆம் வகுப்பு அல்லது மூன்று வருட பட்டயபடிப்பு அல்லது தொழிற்படிப்புகள் படித்திருக்க வேண்டும், 
வயது வரம்பு 03 ஜூலை 2004 மற்றும் 03 ஜனவரி 2007 (இரண்டு தேதிகள் உட்பட) இடையே பிறந்திருக்கவேண்டும் எனவும் தேர்வுக் கட்டணம் ரூ.550 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியுடைய ஆண் மற்றும் பெண் இருபாலரும் இத்தேர்விற்கு https://agnipathvavu.cdac.in என்ற இணையதளத்தின் மூலம் 08.07.2024 முதல் 28.07.2024 வரை இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

தகுதி பெற்ற கோயம்புத்தூர் மாவட்ட இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe