கிராமிய கலைகள் வகுப்புகளுக்காக கோவையில் Folk Studio அரங்கம் திறப்பு...

published 7 months ago

கிராமிய கலைகள் வகுப்புகளுக்காக கோவையில் Folk Studio அரங்கம் திறப்பு...

கோவை: கோவை சுங்கம் பகுதியில் உள்ள மருவரசி வளாகத்தில் நிமிர்வு கலையகம் சார்பில் நாட்டார் கலை ஆட்டங்களுக்கான தனியொரு முதன்மை அரங்கம்(Folk Studio) இன்று திறக்கப்பட்டது. இதனை பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் நாட்டார் கலைஞரும் திரைப்பட நடிகையுமான தீபா சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இங்கு பறை இசை ஆட்டம், துடும்பு இசை ஆட்டம், ஒயிலாட்டம், உடுக்கை இசை, பெட்டிப்பறை, நாட்டார் பாடல்கள், செண்டைமேளம், சதிராட்டம்(பரதம்), செவ்வியல் இசை, மேற்கத்திய ஆட்டம், சிலம்பம், அடிமுறை களரி, வள்ளி கும்மி ஆகியவை பயிற்று விக்கப்பட உள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட நடிகை தீபா சங்கர், மேடை நிகழ்ச்சியில் பேசுவது போல் பேசி அசத்தினார். தொடர்ந்து மேலும் அவர் கலை குழுவில் இருந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

அனைத்து கலைகளுக்கு மூல ஆதாரமாக இருப்பது கிராமிய கலைகள் தான், அது அதிகமானோர்க்கு புரிவதில்லை, டைரி மில்க் க்கு தரும் மதிப்பை கடலை மிட்டாய்க்கு கொடுப்பதில்லை என தீபா சுட்டிக்காட்டினார். மேலும் தற்போது கிராமிய கலைகள் அழிந்து வருகிறது. தப்பாட்டத்தை சாவு வீடுகளில் தான் அடிப்பார்கள் என தப்பாக புரிந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

தற்போது படித்த இளைஞர்கள் பறையை கையில் பிடித்திருப்பதை பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருகிறது என்றார். மேலும் இது பாமர மக்களுக்கான கலை மட்டும் கிடையாது என தெரிவித்த அவர் இது அனைவருக்கும் தெரிய வேண்டும் எனவும் அதற்கு முதலில் இதனை படித்தவர்கள் தெரிந்து கொண்டாலே அனைவரையும் சென்றடையும் என்றார். மேலும் கிராமிய கலைகளுக்கு நாம் அனைவரும் இணைந்து ஆதரவு தர வேண்டும் எனவும் மீண்டும் அது பெரிய வளர்ச்சி அடைய வேண்டும் என தெரிவித்தார். நம் குழந்தைகள் எல்லாம் அது என்னது? என்று கேட்டுவிட கூடாது என தெரிவித்தார். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் இசை கல்லூரிகள் இருக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். கல்யாண வீடுகளில் எல்லாம் நய்யாண்டி மேளங்களை கேசெட்டுகளில் போட்டு விடுவதை குறிப்பிட்ட அவர் அதனை செய்ய வேண்டாம் எனவும் அந்த தொழிலை நம்பி ஒரு குடும்பம் இருப்பதாகவும் அவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்றார். மேலும் பள்ளி கூடங்களிலும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் எனவும் அரசாங்கம் இதற்காக நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென தீபா வேண்டுகோள் விடுத்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe