கோவையில் கோர விபத்து; போலீஸ் மனைவியின் கார் மோதி KTM பைக்கில் சென்ற இளைஞர்கள் பலி!

published 7 months ago

கோவையில் கோர விபத்து; போலீஸ் மனைவியின் கார் மோதி KTM பைக்கில் சென்ற இளைஞர்கள் பலி!

கோவை: காவல் கண்காணிப்பாளரின் மனைவி வந்த காரில் மோதி பைக்கில் சென்ற இருவர் உயிரிழந்த சம்பவம் மேட்டுப்பாளையத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருபவர் சுந்தர வடிவேல். இவரது மனைவி நேற்று அரசு காரில் கோவைக்கு மேட்டுப்பாளையம் வழியாகச் சென்றார்.

அந்த காரை முதல்நிலை காவலர் தமிழ் என்பவர் ஓட்டிச்சென்றார்.  

கார் கல்லாறு அருகே வந்து கொண்டிருந்த போது ஊட்டி காந்தல் பகுதியைச் சேர்ந்த காட்டேஜ் ஊழியர் அல்தாஃப் (21) மற்றும் 
கல்லூரி மாணவர் ஜூனைத் (19) ஆகிய இருவரும் கே.டி.எம் (KTM) மோட்டார் பைக்கில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு நோக்கிச் சென்றனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அல்தாஃப் அதிவேகமாக
ஓட்டிச்சென்ற KTM மோட்டார் பைக் போலீஸ் அதிகாரியின் மனைவி வந்த காரின் மீது பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் மோட்டார் பைக்கில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் மோட்டார் பைக்கில் தீப்பற்றி மளமளவெனப் பற்றி எரியத் துவங்கியது, உஷாரான அப்பகுதி மக்கள் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் இருவரும் கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அல்தாஃப்
பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயமடைந்த ஜூனைத் தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில் வரும் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe