கோவையில் டீக்கடையில் பதுக்கி வைத்து போதைப்பொருள் விற்பனை- சீல் வைத்த அதிகாரிகள்...

published 7 months ago

கோவையில் டீக்கடையில் பதுக்கி வைத்து போதைப்பொருள் விற்பனை- சீல் வைத்த அதிகாரிகள்...

கோவை: கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள ஒரு டீக்கடையில் போதை பாக்கு விற்பதாக புகார் வந்தது. இதையடுத்து காட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் அய்யாசாமி மற்றும் போலீசார் அங்கே சென்று சோதனை செய்னர். அப்போது கடையில் 89 கிலோ எடையிலான போதை பாக்குகள் இருந்தன. 

அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளரான ராம் நகரை சேர்ந்த தினேஷ்குமார் (43) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் உணவு பாதுகாப்பு அலுவலகத்தினர் மூலமாக இந்த கடை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
தினேஷ்குமார் போலீசாரிடம் கூறுகையில், ‘‘கடையில் பெரிய வருமானம் கிடைக்கவில்லை. கர்நாடகாவில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் எளிதாக கிடைக்கிறது. அங்கே சென்று போதை பொருட்களை வாங்கி கொண்டு பஸ்சில் கோவை வந்தேன். 

டீக்கடையில் டீத்தூள் பாக்கெட் போல் பதுக்கி வைத்து பஸ் பயணிகளுக்கு விற்பனை செய்து வந்தேன். அங்கே 5 ரூபாய் பாக்கெட் இங்கே 10 ரூபாய் என இரு மடங்கு விலையில் விற்பனை செய்தேன். இதில் அதிக லாபம் எனக்கு கிடைத்தது.

அதிகமாக என் கடைக்கு கூட்டம் வந்ததால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டனர். நான் மாட்டி கொண்டேன். நான் மேலும் அதிகளவு போதை பாக்குகளை வாங்கி விடிய விடிய விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தேன்’’ என்றார். 

இதேபோல் வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டில் போதை மாத்திரை வைத்து விற்பனை செய்து அதே பகுதியை சேர்ந்த முகமது நவாஸ் (26) என்பவரை போத்தனூர் போலீசார் கைது செய்தனர். இவரிடம் 22 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe