மின்கட்டண உயர்வு? யாருக்கு எவ்வளவு கட்டணம் உயர்ந்துள்ளது? முழு விவரம்!

published 7 months ago

மின்கட்டண உயர்வு? யாருக்கு எவ்வளவு கட்டணம் உயர்ந்துள்ளது? முழு விவரம்!

கோவை: தமிழகத்தில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது, அதன் விவரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுத்தளங்கள், சிறு குறு தொழில் நிறுவனங்கள் உட்பட தொழிற்சாலைகள், ஐ.டி நிறுவனங்களுக்கான மின் கட்டணம் தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள மின் கட்டணத்தில் இருந்து 4.83 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு ஜூலை 1ம் தேதியில் இருந்தே அமலுக்கு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தேர்தல் முடியும் வரை காத்திருந்து தந்திரமாக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகவும், இந்த விலையேற்றம் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல் உள்ளதாகவும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தி.மு.க., அரசை விமர்சித்து வருகின்றனர்.

மின் பயனீட்டு அளவுக்கு ஏற்ப இந்த விலை உயர்வு அமல்படுத்தப்படுகிறது. அதன் விவரம் பின்வருமாறு:

400 யூனிட் வரை மின் பயன்பாடு உள்ளவர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60ல் இருந்து, ரூ.4.80 ஆக கட்டணம் உயர்ந்துள்ளது.

401-500 யூனிட் வரை ரூ. 6.15ல் இருந்து ரூ.6.45 ஆகவும், 501-600 யூனிட் வரை ரூ.8.15ல் இருந்து ரூ.8.55 ஆகவும் அதிகரித்துள்ளது.

601 யூனிட்டில் இருந்து 800 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.9.20ல் இருந்து ரூ.9.65 ஆக கட்டணம் அதிகரித்துள்ளது.

801-1000 யூனிட் வரை ரூ.10.20ல் இருந்து ரூ.10.70 ஆகவும், 1000 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ரூ.11.25ல் இருந்து ரூ.11.80 ஆகவும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அபார்ட்மெண்ட்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.8.15 வசூலிக்கப்பட்டு வந்த  நிலையில், இனி ஒரு யூனிட்டுக்கு ரூ.8.55ஆக வசூலிக்கப்பட உள்ளது.

ஏற்கனவே, பீக்ஹவர் மின் கட்டண உயர்வால் தொழில்கள் நலிவடைந்து, வாழ்வாதாரத்தை இழந்து வருவதாக தொழில்துறையினர் தெரிவித்து, பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், அதற்கு செவி சாய்க்காமல், மேலும் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது, உண்மையிலேயே "வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல"த்தான் உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe