கோவை மாநகராட்சியில் மழைக்கால டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை- மாநகராட்சி ஆணையாளரின் அறிவிப்பு...

published 7 months ago

கோவை மாநகராட்சியில் மழைக்கால டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை- மாநகராட்சி ஆணையாளரின் அறிவிப்பு...

கோவை: கோயமுத்தூர் மாநகராட்சியில் 100 வார்டுகளுக்குட்பட்ட அனைத்து பகுதிகள்  மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழைக்காலம் தீவிரம் அடைந்துள்ளதால், டெங்கு காய்ச்சலை பரப்பும் எ.டி.எஸ் கொசுக்கள் உற்பத்தியாவதற்கான சாதகமான காலநிலை நிலவுகிறது.

மேலும் பொதுமக்கள் அவர்தம் வீடுகள் கட்டுமான இடங்கள்/ வணிக வளாகங்கள் பணிபுரியும் அலுவலங்கள் மற்றும் அங்காடிப்பகுதிகளில் உள்ள நீர் சேகரிப்பு கொள்கலன்களை கொசு புகாதவாறு மூடி வைக்கவேண்டும். வீட்டை சுற்றியுள்ள இடங்களில் தேவையற்ற உடைந்த பொருட்கள் இருப்பின் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். அனைத்து பள்ளி மாணவ மாணவியர்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவுதலை தடுப்பது மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அவர்தம் வீடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கொசுக்கள் பரவாமல் தடுப்புப்பணிகளை கையாள்வது குறித்தும், மாணவ மாணவியர்களில் காய்ச்சல் ஏற்படும்போது அது குறித்து சம்பந்தப்பட்ட வார்டு மண்டல சுகாதார அலுவலர் மற்றும் துப்புரவு ஆய்வாளர்களிடம் உடனடியாக தெரிவிக்கவேண்டும்.

மேலும், பொதுமக்கள் தங்கள் வீட்டுக் கூரைகளில் டயர் உள்ளிட்ட தேவையற்ற பொருட்கள் போடுவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும். டெங்கு காய்ச்சல் தடுப்புபணியில் ஈடுபடும் மாநகராட்சி ஊழியர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். காய்ச்சல் ஏற்படின் மருந்தகங்களில் மருந்துக்கள் வாங்கி பயன்படுத்துவதை தவிர்த்து, உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மருத்துவமனைகளில் தகுந்த சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். தினசரி குடிநீரை காய்ச்சி ஆற வைத்து பருக வேண்டும்.

மேலும், தனியார் நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களில் கொசுக்கள் உற்பத்தியாவதை
தவிர்க்கவேண்டும். மேலும், கொசுக்கள் உற்பத்தி கண்டறியப்படும் நிறுவனங்களின் மீது கடுமையான
நடவடிக்கை மேற்கொண்டு அபராதம் விதிக்கப்படும் என  எச்சரிக்கப்படுகிறது என மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன்  தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe