கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை நடைபெறும் கடைசி தேதி அறிவிப்பு...

published 7 months ago

கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை நடைபெறும் கடைசி தேதி அறிவிப்பு...

கோவை: கோயமுத்தூர் மாவட்டத்திலுள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் 2024ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை 3107.2024 வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் பிரதான சாலையில் அமைத்துள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை 31.07.2024 வரை நடைபெறவுள்ளது என கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார்பாடி  தெரிவித்துள்ளார்

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் கோவையில் ஆகஸ்ட் 2024 ஆம் கல்வியாண்டில் பயிற்சியாளர்களின் நேரடி சேர்க்கையானது 31.07.2024 வரை நடைபெறவுள்ளது. இதில் கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் FITTER, TURNER, TURNER (DST). MACHINIST, MACHINIST(DST), COPA, ICTSM, INSTRUMENT MECHANIC, MMTM, PPO, TECHNICIAN MECHATRONICS, FOOD PRODUCTION, INTERIOR DESIGN AND DECORATION, EM, REMOTELY PILOTED AIRCRAFT (DRONE PILOT) ஓராண்டு மற்றும் ஈராண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி  சேர்க்கை நடைபெறவுள்ளது.

மேலும் TATA INDUSTRY 4.0 திட்டத்தின் கீழ் புதிய தொழிற்பிரிவுகளான ADVANCED CNC MACHINING TECHNICIAN, INDUSTRIAL ROBOTICS & DIGITAL MANUFACTURING, BASIC DESIGNER & VIRTUAL VERIFIER, MANUFACTURING PROCESS CONTROL &
AUTOMATION முதலிய ஈராண்டு மற்றும் ஓராண்டு தொழிற்பிரிவுகளில்
உள்ள காலியிடங்களுக்கு நேரடி சேர்க்கை நடைபெறவுள்ளது.

மேலும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் காலியிடங்கள் பூர்த்தி செய்யப்படும் என்பதால் இந்த அரியவாய்ப்பினை உபயோகப்படுத்திக் கொள்ளுமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதற்கான பயிற்சிக்கட்டணம் முற்றிலும் இலவசம் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் இலவச மடிக்கணினி மிதிவண்டி, பேருந்து அட்டை சீருடைகள், காலணிகள் மற்றும் வரைபடக்கருவிகள், NIMI புத்தகம் அரசால்
இலவசமாக வழங்கப்படுகிறது. பிரதி மாதம் ரூ.750/-வீதம் வருகையின்
அடிப்படையில் கல்வி உதவித்தொகை அரசால் வழங்கப்படுகிறது.

இதற்கான கல்வித்தகுதி தொழிற்பிரிவுகளை பொறுத்து 8ஆம்வகுப்பு 10
ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் பிற்படுத்தப்பட்ட / மிகவும்
பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பு / பழங்குடியினர் பயிற்சியாளர்களுக்கு
உணவு வசதியுடன் தங்கும் விடுதிவசதி (தகுதியின் அடிப்படையில்
வழங்கப்படும். வயதுவரம்பு 14 முதல் 40 வரை மகளிருக்கு உச்ச வயது வரம்பு இல்லை)

இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த அனைத்து
பயிற்சியாளர்களுக்கும் வளாக நேர்காணல் (Campus Interview) மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்று வழங்கப்படுகிறது என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு-  0422-2642041, 8825434331, 8072737402 என்ற எண்ணை அணுகலாம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe