விரட்டிய யானை... விழுந்தடித்து ஓடிய நபர்... தடாகத்தில் திக்... திக்...

published 7 months ago

விரட்டிய யானை... விழுந்தடித்து ஓடிய நபர்... தடாகத்தில் திக்... திக்...

கோவை: கோவை மாவட்டத்தில் தடாகம் மாங்கரை கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதால் விளைநிலங்கள் சேதமாகி வருகின்றன.

நேற்று முன்தினம் தடாகம் தண்ணீர் பந்தல் பகுதிக்கு வந்த இரண்டு காட்டு யானைகள் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த ஓலை குடிசையை சேதப்படுத்தியது. இந்த நிலையில் நேற்று இரவு திருவள்ளுவர் நகர் பகுதிக்கு வந்த இரண்டு காட்டு யானைகள் ஊருக்குள் உலா வந்தன. 

அப்போது ஒரு வீட்டார் யானையைப் பார்ப்பதற்கு கேட்டின் முன்பு நின்று கொண்டிருந்த நிலையில் திடீரென ஒரு காட்டு யானை அவர்களை தாக்க முற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அனைவரும் வீட்டிற்குள் சென்றதால் உயிர் தப்பினர்.

இதனை அக்கம் பக்கத்தினர் அவர்களது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர் .தற்பொழுது இந்த காட்சிகள் வெளியாகி உள்ளது.

இப்பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் ஊருக்குள் உலா வருவதால் வனத்துறையினர் ரோந்து பணிகளை தீவிர படுத்த வேண்டும் எனவும் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் ஊருக்குள் வராத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரி வருகின்றனர்.

 

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/ExtxKlP7m9s

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe