SBI வங்கியில் சிறப்பு அதிகாரி வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

published 7 months ago

SBI வங்கியில் சிறப்பு அதிகாரி வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

SBI வங்கியில்  சிறப்பு அதிகாரி பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள்

பொருளாதார நிபுணர், பாதுகாப்பு வங்கி ஆலோசகர் – ராணுவம் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மும்பை, டெல்லி ஆகிய இடங்களில்  பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

கல்வி

பொருளாதார நிபுணர் பணிகளுக்கு -  60% மதிப்பெண்களுடன் முதுகலையில்  Economics / Econometrics / Statistics / Applied Statistics / Mathematical Statistics / Mathematical Economics / Financial Economics போன்ற ஏதேனும் ஒரு துறையில் டிகிரி  பெற்றிருக்க வேண்டும்.

பாதுகாப்பு வங்கி ஆலோசகர் பணிக்கு - இந்திய ராணுவத்தில் இருந்து லெப்டினன்ட் ஜெனரல் அல்லது அதற்கு மேல் பதவியில் இருந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக தேவையான தகவல்கள் மற்றும் ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க  கடைசி தேதி  06.08.2024 ஆகும்.

தேர்வு  முறை

Shortlisting, Merit List மற்றும் Interaction மூலம் தகுதியான நபர்கள்  தேர்வு செய்யப்படுவர்.

மேலும் விவரம்

இந்த பணியிடங்கள் தொடர்பாக மேலும் தகவல்களை அறிந்து கொள்வதற்கு  அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்க்கவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe