கோவையில் பத்து ஆண்டுகளாய் வீட்டைவிட்டு வெளியேறாமல் இருக்கும் தாய் மகள்- அதிர்ச்சி தரும் வீடியோ...

published 7 months ago

கோவையில் பத்து ஆண்டுகளாய் வீட்டைவிட்டு வெளியேறாமல் இருக்கும் தாய் மகள்- அதிர்ச்சி தரும் வீடியோ...

கோவை: பத்து ஆண்டுகளுக்கு மேலாக வீட்டை விட்டு வெளியே வராமல் வாழ்ந்து வரும் தாய் மகளின் அதிர்ச்சி தரும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

கோவை காட்டூர்  பகுதியில் உள்ள தனியார்  அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இரண்டு பெண்கள் ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டை விட்டு வெளியே வராமல் வாழ்ந்து வந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த குடியிருப்பு வாசிகளில் இருவரில்  ஒருவர் பெயர் ருக்மணி ஏறக்குறைய 60 வயது

மற்றொருவர் அவரது மகள் திவ்யா ஏறக்குறைய 40 வயது என தகவல்

இந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் இவர்கள் இருவர் மட்டுமே வசிக்கின்றனர்.

பல வருடங்களாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்ததாலும் அக்கம் பக்கத்தினர் யாருடனும் எந்த விதமான பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருந்ததாலும் வெளி உலகத் தொடர்பே இல்லாமல் இருந்து இருக்கின்றனர் எனக் கூறப்படுகின்றது.

இருவருக்கும் ஏதேனும் மனநல பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

பல வருடங்களாக வீட்டை சுத்தம் செய்யாததால் வீடே குப்பைக் கூளமாக இருக்கின்ற காட்சி அதிர்ச்சியை அளிக்கின்றது.

அதற்குள் எறும்பு, கரையான், பல்லி, பூரான், கரப்பான், எலி மூட்டைப்பூச்சி என்று ஏகப்பட்ட ஜந்துக்கள் வீடு முழுவதும் நிறைந்து கிடக்கும் குப்பையில் இருக்கிறது.

கெட்டுப்போன உணவையும் சுகாதாரமற்ற புழுக்கள் நெளியும் நீரைக் குடித்தும் வாழ்ந்து வந்து இருக்கின்றனர்.

சி.சி.டி.வி கேமரா மூலம் இவர்கள் வசிக்கும் அவல நிலை தற்போது தெரிய வந்துள்ளது.

இத்தகைய சூழலால் அவர்கள் இருவருக்கும் பாதிப்பு ஏற்படுவதோடு அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மற்ற குடும்பங்களுக்கும் கூட சுகாதார சீர்கேடு மற்றும் தொற்றுநோய் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் நிலை தற்போது எழுந்துள்ளது

உதவிக்கு யாரும் இல்லாமல் தன்னந்தனியே வசிக்கும் இந்த பெண்களின் வீட்டை கோவை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களைக் கொண்டும் தன்னார்வலர் அமைப்புகள் மூலமாகவும் உடனடியாக சுத்தம் செய்ய வேண்டியது அவசியமாகும்.

வீட்டை சுத்தம் செய்து மனநல பாதிப்பு உள்ளாகி இருக்கும் இந்த பெண்மணிகள் இருவரையும் இத்தகைய மோசமான சூழலில் இருந்து மீட்டு உரிய மனநல ஆலோசனை மற்றும்  சிகிச்சை அளிப்பதோடு அவர்களுக்கு யாரேனும் உறவினர்கள் இருந்தால் தகவல் தெரிவித்து அவர்களது நிலையை மாற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அந்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://www.youtube.com/watch?v=9Aa8mYsnxNM

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe