சிங்காநல்லூரில் சிறுவன் மீது ஏறி இறங்கிய பள்ளி வேன்: பெற்றோர்களே கவனம்... வீடியோ உள்ளே!

published 7 months ago

சிங்காநல்லூரில் சிறுவன் மீது ஏறி இறங்கிய பள்ளி வேன்: பெற்றோர்களே கவனம்... வீடியோ உள்ளே!

கோவை: கோவையில் 1ம் வகுப்பு மாணவன் மீது வேன் ஏறிய அதிர்ச்சி ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி நெஞ்சை உலுக்கியுள்ளது.

கோவை இருகூரைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது இரண்டு மகன்கள் சிங்காநல்லூரை அடுத்த போட் ஹவுட் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

இதனிடையே மாணவர்கள் இருவரும் வழக்கம் போல பள்ளியில் இருந்து வேனில் வீடு திரும்பினர். அப்போது வேனில் இருந்து ஒரு சிறுவன் இறங்கிவிட, 1ம் வகுப்பு படிக்கும் சிறுவன் இறங்குவதற்கு முன்பாகவே வேன் டிரைவர் வண்டியை எடுத்துவிட்டார்.

இதில் வேனின் பின் சக்கரம் சிறுவன் மீது ஏறி இறங்கியது. படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்த சி.சி.டி.வி காட்சி வெளியான நிலையில், காவலர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் மீது பள்ளி வேன் ஏறிய சம்பவம் பெற்றோர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

பெற்றோர்களே ஆட்டோ, வேன் மற்றும் பஸ்களில் செல்லும் உங்கள் குழந்தைகளுக்கு எப்படி பயணிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொடுங்கள். இந்த செய்திக்கான வீடியோவை காண லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe