மருதமலை அருகே குடியிருப்பு பகுதிகளுக்குள் முகாமிட்டுள்ள 10 காட்டு யானைகள்

published 6 months ago

மருதமலை அருகே குடியிருப்பு பகுதிகளுக்குள் முகாமிட்டுள்ள 10 காட்டு யானைகள்

கோவை: கோவை மாவட்டத்தில் தடாகம், மருதமலை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் உள்ளது.

இந்நிலையில் மருதமலை மற்றும் கெம்பனூர் பகுதியில் சுமார் 10 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. மருதமலை அடிவாரம் ஐஓபி காலனி குடியிருப்பு பகுதிக்குள் இந்த யானை கூட்டம்  புகுந்தது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு வந்த வனத்துறையினர் யானைகளை மருதமலை வனப் பகுதிக்குள் விரட்டினர். 

10 யானைகளும் குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவதை அங்கிருந்த மக்கள் அவர்களது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/LgSfb9soejc

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe