ரிலைன்ஸ் ஜியோவில் வேலைவாய்ப்பு- கோவை மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு...

published 6 months ago

ரிலைன்ஸ் ஜியோவில் வேலைவாய்ப்பு- கோவை மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு...

கோவை: கோயம்புத்துார் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலமாக RELIANCE JIO INFOCOMM LIMITED என்ற தனியார் நிறுவனத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலியாக உள்ள சுமார் 4000 திற்கும் மேற்பட்ட பல்வேறு பணியிடங்களுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 26.072024 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மைய அலுவலகவளாகத்தில் நடைபெறவுள்ளது.

Home Sales Officer, Jio Point Assistant Manager, Jio Point Manager, Enterprise Sales Officer. Digital Repair Specialist, JioFiber Associate, JioFiber Engineer. Air Fiber Freelancer Techncian (Freelance Job), Jio Point Lead and Channel Sales Lead பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி (SSLC Pass), ஐடிஐ(ITI) டிப்ளமோ (Diploma) மற்றும் ஏதேனும் ஒருபட்டப்படிப்பு (Any Degree) முடித்த Freshers / Experienced மனுதாரர்களை நேர்காணல் வாயிலாக தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் கலந்துகொள்ள அதிகபட்ச உச்சவயது வரம்பு 45 ஆகும். எனவே. விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்கள் கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன். நேரடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோவை அலுவலகத்திற்கு வருகைபுரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இம்முகாமில் கலந்துகொள்ள அனுமதி முற்றிலும் இலவசம். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடும் மனுதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு 0422-2642388 என்ற தெலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மனுதாரர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு இம்முகாமினை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு
மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி
தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe