அவினாசி ரோடு மேம்பாலம் கட்டுமானத்தின் புகைப்படங்கள்: எந்த பகுதி என கண்டுபிடிக்க முடியுமா?

published 6 months ago

அவினாசி ரோடு மேம்பாலம் கட்டுமானத்தின் புகைப்படங்கள்: எந்த பகுதி என கண்டுபிடிக்க முடியுமா?

கோவை: அவினாசி சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் அழகிய புகைப்படங்களை இந்த தொகுப்பில் காணலாம். (புகைப்படங்கள்: டேவிட்)

கோவையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த முக்கிய சாலைகளுள் முதன்மையானது அவினாசி சாலை. மருத்துவமனைகள், பல்வேறு பள்ளி-கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் இந்த சாலையில் அமைந்துள்ளதால் எந்த நேரமும் இச்சாலை 'படு பிசியாக' இருக்கும்.

முகூர்த்த நாட்களில் வாகன நெரிசல் அதிகரித்து வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அவிநாசி ரோடு உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்டுவின்ஸ் வரை வரை சுமார் ரூ.1,610 கோடி செலவில் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியது.

10 கிலோ மீட்ட தூரத்திற்கு, நான்கு வழி உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் இந்த பணி கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

தற்போது மேம்பாலத்தின் 60% பணிகள் முடிவடைந்துள்ளன. அந்த புகைப்படங்களை இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம். ஒவ்வொரு புகைப்படும் எந்தெந்த பகுதி என கண்டுபிடித்துவிட்டால் உங்களுக்கு சபாஷ் போட்டுக்கொள்ளுங்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe