எம்பி தயாநிதி மாறன் மீது கோவையில் பதியப்பட்ட வழக்கு சென்னைக்கு மாற்றம்...

published 6 months ago

எம்பி தயாநிதி மாறன் மீது கோவையில் பதியப்பட்ட வழக்கு சென்னைக்கு மாற்றம்...

கோவை: 2020 ஆம் ஆண்டு தி.மு.க., எம்.பிக்கள் தயாநிதி மாறன், டி.ஆர் பாலு, தமிழச்சி தங்கபாண்டியன் இணைந்து தலைமை செயலகத்தில் பேட்டி அளித்தனர். அப்போது தயாநிதி மாறன் பேசுகையில் கொரோனா நிவாரண நிகழ்ச்சி தொடர்பாக மனு அளிக்க சென்ற போது அப்போதைய முதன்மை செயலர் சண்முகம் உரிய மரியாதை இல்லாமல் தாழ்த்தப்பட்ட மக்களை போன்று நடத்தியதாக கூறினார்.

இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. எம்.பி தயாநிதி மாறன்  தாழ்த்தப்பட்ட மக்களை இழிவு படுத்தியதாக கோவையைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர்  புகார் அளித்த . அ .தி.மு.க ஆட்சிக் காலத்தில் தயாநிதி மாறன் மீது தாழ்த்தப்பட்டவருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கோவை பி.3 காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. 

வழக்கு விசாரணையின் சம்பவ இடம் சென்னை என்பதால் இந்த வழக்கு தற்போது சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணையை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் துவக்கி உள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe