கோவையில் இறந்துகிடந்த காட்டு பன்றி; விற்க முயன்றவர்களுக்கு அபராதம்!

published 6 months ago

கோவையில் இறந்துகிடந்த காட்டு பன்றி; விற்க முயன்றவர்களுக்கு அபராதம்!

கோவை: கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட மாங்கரை அருகே, ஆனைகட்டி - கோவை சாலையில் வாகனம் மோதி காட்டு பன்றி பலியானது.

இதனை பார்த்த தடாகம் குட்டவெளியை சேர்ந்த மருதாசலம், ரங்கநாதன் ஆகியோர் காட்டு பன்றியை எடுத்து சென்று, அதனை வெட்டி கூறு போட்டனர்.

பின்னர் அந்த இறைச்சியை விற்பனை செய்ய முயன்றனர். இதனைப்பார்த்த அந்த வழியாக ரோந்து சென்ற வன பணியாளர்கள் இருவரையும் பிடித்து கோவை வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.

அவர்களிடம் இருந்து 15 கிலோ காட்டு பன்றி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இருவருக்கும் ரூ. 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe