மாற்றுத்திறனாளிகள் அரசு தேர்வுகளில் பங்கேற்க பயிற்சி வகுப்புகள்- கோவை மாவட்ட ஆட்சியரின் அறிக்கை...

published 6 months ago

மாற்றுத்திறனாளிகள் அரசு தேர்வுகளில் பங்கேற்க பயிற்சி வகுப்புகள்- கோவை மாவட்ட ஆட்சியரின் அறிக்கை...

கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அரசு போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் பொருட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் ஏனைய அரசு தேர்வாணையங்களால் நடத்தப்படும் தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி அடைவதற்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

அரசு போட்டித்தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் ஏனைய அரசு தேர்வாணையங்களால் நடத்தப்படும் தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று வேலைவாய்ப்பு பெறும் வகையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலமாக அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு போட்டித்தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பினை முதற்கட்டமாக 100 மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு மற்றும் தங்கும் விடுதி வசதியுடன் கூடிய சிறப்பு பயிற்சி வகுப்புகள் 01.08.2024 அன்று காலை 10.00 மணியளவில் சி.எஸ்.ஜ காது கேளாதோருக்கான மேல்நிலைப்பள்ளி, சாந்தோம் உயர் சாலை, மயிலாப்பூர் சென்னையில் நடைபெற உள்ளது.

எனவே, கோயம்புத்தூர் மாவட்டத்தை சார்ந்த விரும்பமுள்ள மாற்றுதிறனாளிகள் 29.07.2024-க்குள் விண்ணப்பங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்து பயன்பெறுமாறு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe