பச்சை நிற சேலையில் ரகுல் பிரீத் சிங்... கலக்கலான க்ளிக்ஸ்!

published 6 months ago

பச்சை நிற சேலையில் ரகுல் பிரீத் சிங்... கலக்கலான க்ளிக்ஸ்!

நடிகை ரகுல் பிரீத் சிங், பச்சை நிற புடவையில் இருக்கும் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை  இன்ஸ்டாவில்  வெளியிட்டுள்ளார்.

தமிழில் தடையற தாக்க என்ற படத்தின் மூலம் இவர் அறிமுகம் ஆனார். இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், நடிகர் கார்த்தி ஜோடியாக   தீரன் அதிகாரம் ஒன்று படத்தில், நடித்த பின் பிரபலம் ஆனார்.  

தொடர்ந்து  கார்த்தி உடன் தேவ்,  சூர்யா உடன் என்.ஜி.கே, சிவகார்த்திகேயன் ஜோடியாக அயலான் உள்ளிட்ட தமிழ் மொழி படங்களில் படத்தில் நடித்தார். தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து  உள்ளார். தமிழில் கடைசியாக இந்தியன் 2 படத்தில் நடித்தார். தற்போது பாலிவுட்டில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் இவர் இந்தியன் 3 படத்திலும் நடித்து வருகிறார்.

ஜாக்கி பக்னானி என்பவரை, காதலித்து வந்த ரகுல் ப்ரீத் சிங், இருவீட்டார், நண்பர்கள் முன்னிலையில்  கடந்த பிப்ரவரி மாதம் கோவாவில் திருமணம் செய்து கொண்டார்.  

இன்ஸ்டாவில் அடிக்கடி தனது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது பச்சை நிற புடவையில் இருக்கும் தன் க்யூட் போட்டோஸ்களை ஷேர் செய்துள்ளார். இதற்கு ரசிகர்கள் இதயங்களை பறக்க விட்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe