தனுஷின் ராயன் திரைப்படம் இன்று வெளியான நிலையில் கோவையில் ரசிகர்கள் கொண்டாட்டம்...

published 6 months ago

தனுஷின் ராயன் திரைப்படம் இன்று வெளியான நிலையில் கோவையில் ரசிகர்கள் கொண்டாட்டம்...

கோவை: நடிகர் தனுஷ் அவரே இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் தனுஷ் உட்பட பிரபல திரைப்பட நடிகர்களான பிரகாஷ்ராஜ், எஸ்.ஜே சூர்யா, இயக்குனர் செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம் நடிகைகள் அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு  ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

 

இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இன்று இந்த திரைப்படம் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு தமிழகத்தில் பெரும்பாலான திரைகள் ஒதுக்கப்பட்ட நிலையில் ஏறத்தாழ  அனைத்து திரைகளும் நிரம்பி உள்ளன. தனுஷ் ரசிகர்கள் பலரும் திரைப்படம் வெளியானதை கொண்டாடி வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் நூறடி சாலையில் உள்ள பிரபல தனியார் திரையரங்கில் இத்திரைப்படத்தை காண வந்த தனுஷ் கோவை மாவட்ட தலைமை ரசிகர் மன்றத்தினர் ஆளுயர பூ மாலையை எடுத்து வந்தும் பட்டாசு வெடித்தும் மேல தாளங்களுடன் ஆட்டமாடி திரைப்படம் வெளியானதை கொண்டாடினர்.

நிச்சயமாக இந்த திரைப்படம் வெற்றிபெறும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe