புஷ்பா 2 ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப் போகிறது?

published 6 months ago

புஷ்பா 2 ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப் போகிறது?

புஷ்பா 2 படத்தின்  திரையரங்கு  வெளியீடு தள்ளிப் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2021ம் ஆண்டு இயக்குநர் சுகுமார் இயக்கத்தில்   நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில்,  வெளியான புஷ்பா தி ரைஸ் படம்  மிகப் வெற்றியை பெற்றது.  தொடர்ந்து புஷ்பா படத்தின் இரண்டாம்  பாகம் உருவாகி வருகிறது. 

அல்லு அர்ஜுன்,  பகத் பாசில், ராஷ்மிகா  உள்ளிட்டோர்  நடித்து வருகின்றனர்.  படத்தின் பாடல்கள், டீசர் ஆகியவை வெளியாகி வரவேற்பை பெற்றது. படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.  

புஷ்பா 2 ரிலீஸ் தேதி ஒத்தி வைப்பு... இதுதான் காரணம்!

புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம், ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக முன்னதாக கூறப்பட்டது. படத்தின் இறுதி கட்டப் பணிகள்  நிறைவடையவில்லை என்பதால் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில்,  புஷ்பா 2ம் பாகம் வரும் டிசம்பர் 6ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.

புஷ்பா 2" 2வது பாடல் எப்போது.. வெளியானது மாஸ் அப்டேட்.. கொண்டாடும்  ரசிகர்கள்! | Pushpa 2 movie 2nd single couple song release date announced

ஆனால் தற்போது டிசம்பர் 6ம் தேதி வெளியிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. புஷ்பா 2 படத்தின் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. ஒரு பாடல் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஏப்ரல் 2025 வரை படத்தின் ரிலீஸை தள்ளிவைக்க படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe