மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

published 6 months ago

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

கோவை: மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதை கண்டித்து  கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் கே.சாமிநாதன் கண்டன உரை நிகழ்த்தினார். ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டில் அதிக வரி செலுத்தும் மாநிலமான தமிழ்நாடு புறக்கணிப்பு, கோவை தொழில் துறையின் கோரிக்கைகள் நிராகரிப்பு, கோவை மெட்ரோ ரயிலுக்கு நிதி ஒதுக்க மறுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்டித்தும், விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணாத ஒன்றிய மோடி அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திரளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் கனகராஜ், ஜோதிமணி, ஜாகீர், மூர்த்தி கோவை மாநகராட்சி மன்ற கவுன்சிலர் ராமமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe