கோவை புத்தக திருவிழா நிறைவு பெற்றது- இந்த ஆண்டு விற்பனை எவ்வளவு தெரியுமா..?

published 6 months ago

கோவை புத்தக திருவிழா நிறைவு பெற்றது- இந்த ஆண்டு விற்பனை எவ்வளவு தெரியுமா..?

கோவை: கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா அமைப்பு இணைந்து நடத்தும் 8வது புத்தக திருவிழா கொடிசியாவில் 19ம் தேதி துவங்கி இன்று  இரவு 8 மணியுடன் நிறைவு பெற்றது.

இதில் பல்வேறு பதிப்பாளர்கள் அவர்களது புத்தகங்களை காட்சிப்படுத்தி இருந்தனர். நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இன்றுடன் இந்த புத்தக திருவிழா முடிவடைந்த நிலையில் 75 ஆயிரம் பேர் கண்காட்சிக்கு வருகை புரிந்துள்ளதாக கொடிசியா அமைப்பினர் தகவல் அளித்துள்ளனர். கடந்த ஆண்டு 67,500 பேர் புத்தகத் திருவிழாவிற்கு வருகை புரிந்த நிலையில் இந்த ஆண்டு 7500 பேர் கூடுதலாக வருகை புரிந்துள்ளனர். 

இம்முறை 224 பள்ளிகளை சேர்ந்த பள்ளி மாணவர்களும் 71 அரசு பள்ளி மாணவர்களும் 17,000 பள்ளியை சாராத மாணவர்களும் 62 கல்லூரி மாணவர்களும், கல்லூரியை சாராத  5000 மாணவர்களும் வருகை புரிந்துள்ளனர்.

இம்முறை சுமார் மூன்று கோடி அளவிற்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாகவும்  பெரும்பாலும் குழந்தைகளுக்கான புத்தகங்களும், நாவல் புத்தகங்களும் அதிகமாக விற்பனையாகி உள்ளதாக கொடிசியா அமைப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe