கோவையில் சத்துணவில் உண்ணும் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை…

published 6 months ago

கோவையில் சத்துணவில் உண்ணும் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை…

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள 1373 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-8 வகுப்புகளில் பயிலும் மாணவர்களில் சத்துணவு உண்ணும் 1,03,776 மாணாக்கர்களுக்கு 2024-2025 கல்வியாண்டில் விலையில்லா சீருடைகள் வழங்கும் திட்டத்தை துவங்க  சமூகநல ஆணையர் தெரிவித்துள்ளார். 

 

அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இராமநாதபுரத்தில் உள்ள பெருமாள் கோவில் வீதியில் உள்ள தொடக்க பள்ளியில் சீருடைகள் வழங்கி விநியோக பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்,ஆசிரியர்கள்,அரசு அதிகாரிகள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகளை வழங்கினர்.

ஏற்கனவே மாணவர்களுக்கு 10 அளவுகளில் வழங்கி வந்த நிலையில் தையல் சங்க உறுப்பினர்களை கொண்டு அளவெடுத்து 24 முதல் 51 வகையான அளவுகளில் மாணாக்கர்களுக்கு வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சீருடையின் தரத்தை உயர்த்த காலர்களில் கேன்வாஸ் வைத்து தைத்து தரம் உயர்த்தி தைக்கப்பட்டு வருகிறது.அளவு எடுத்த மாணவர்கள் வளர்ச்சி காரணமாக அளவுகள் மாறுபட்டிருந்தால் மாற்றி தரவும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி கல்வி அலுவலர்,மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்,தொழிற் கூட்டுறவு அலுவலர் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe