எங்களுக்கும் அவசியம்; மன்றாடும் ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள்!

published 6 months ago

எங்களுக்கும் அவசியம்; மன்றாடும் ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள்!

கோவை: கோவை மாவட்டத்தில் பணியிட வசதியின்றி, பாதுகாப்பற்ற சூழலில் பணிபுரிந்து வரும் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் சுமார் 65க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ்கள் இரவு பகலாக இயங்கி வருகின்றன. இதில் 250க்கும் மேற்பட்ட ஆண், பெண் மருத்துவப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றோம்.

இந்த நிலையில், ஆம்புலன்ஸ் வாகனங்களை நிறுத்துவதற்கு, சுத்தப்படுத்துவதற்கு இடமின்றியும், இயற்கை உபாதைகளைக் கழிக்கக்கூட இடமின்றியும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். எனவே வாகனங்களை நிறுத்தவும், ஆம்புலன்ஸ் நிறுத்தும் இடங்களில் கழிவறையுடன் கூடிய ஓய்வு அறையும் வேண்டும்.

ஆட்கள் பற்றாக்குறையால் பல ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுவதில்லை. இதனைக் கருத்தில் கொண்டு பணியாளர்களை நியமிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் வாகனங்களை சுத்தப்படுத்த தனி இடம் வேண்டும்.

ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சட்டத்திற்கு புறம்பாக இடமாற்றம் செய்யப்படுகின்றனர். அதிகாரிகளின் பழிவாங்கும் போக்கைத் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கூறினர்.

மக்களின் உயிரை காக்கும் ஆம்புலன்ஸ் ஊழியர்களின் அடிப்படை தேவைகளை அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுப்பெற்றுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe