உக்கடம் பாலத்தால் போனது வாழ்க்கை- கொட்டும் மழையில் போராட்டம்!

published 6 months ago

உக்கடம் பாலத்தால் போனது வாழ்க்கை- கொட்டும் மழையில் போராட்டம்!

கோவை:கோவை மாநகர் உக்கடம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளுக்காக சிஎம்சி காலனி குடியிருப்புகள் அகற்றப்பட்டு அங்கு வசித்த மக்களுக்கு வேறு இடத்தில் தகர கொட்டகை அமைத்து தரப்பட்டது.  

மேம்பால பணிகள் முடிந்தவுடனேயே அதே இடத்தில் குடியிருப்புகள் கட்டி தரப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் மேம்பால பணிகள் ஏறத்தாள நிறைவுற்ற போதிலும் குடியிருப்புகள் கட்டி தரப்படவில்லை.  இதனால் சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த மக்கள் தகர கொட்டையிலேயே வசித்து வருகின்றனர்.

இது சம்பந்தமாக அவர்கள்  மாநகராட்சி நிர்வாகம் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்து வருகின்றனர். பல்வேறு கட்சிகள் அமைப்புகள் சார்பிலும்  குடியிருப்புகள் கட்டித்தர தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சிஎம்சி காலணியில் தூய்மை பணி புரியும் அருந்ததியர் மக்களின் குடியிருப்புகளை உடனடியாக கட்டி தர வலியுறுத்தி தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் உக்கடம் பகுதியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ சிந்தனைச் செல்வன், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், முன்னாள் கோவை எம்பி பி ஆர் நடராஜன் உட்பட பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள், கட்சியினர் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உடனடியாக குடியிருப்புகளை கட்டித் தர வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தின் இடையில் மிதமான மழை பெய்தது. இருப்பினும்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe