சூர்யா நடிக்கும் கங்குவா படத்தில் கார்த்தி? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

published 6 months ago

சூர்யா நடிக்கும்  கங்குவா படத்தில் கார்த்தி? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள  கங்குவா திரைப்படத்தில், அவரது தம்பியும், நடிகருமான  கார்த்தி  நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆதி நெருப்பே!  கங்குவா படத்தின் முதல் பாடல் ரிலீஸ்... வீடியோ உள்ளே!

சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா படம் உருவாகியுள்ளது. படத்தில் சூர்யா  2  வித்யாசமான கதாபாத்திரங்களில்  நடித்துள்ளதாக கூறப்படுகிறது. வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இந்த படம்  சர்வதேச அளவில் 10 மொழிகளில் ரிலீசாக உள்ளதாகவும், ஓ.டி.டி.,யில் 20 மொழிகளில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Kanguva first single Fire song feat. a medieval Suriya out now! Tamil  Movie, Music Reviews and News

நடிகை திஷா படானி, நடராஜ்,  நடிகர் பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  ஞானவேல் ராஜா படத்தை தயாரிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

கங்குவா  படம் வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு கங்குவா படத்தின், Fear song எனப் பெயரிடப்பட்டுள்ள  முதல் பாடல்  வெளியானது.  

ஒரே இடத்தில் நடைபெறும் சூர்யா-கார்த்தி படப்பிடிப்பு? | Tamil cinema surya  karthi movie shooting happening in same place

இந்த நிலையில் கங்குவா படத்தின் இறுதி காட்சியில் சூர்யாவின் தம்பியும், நடிகருமான  கார்த்தி நடித்து இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனை பாடலாசிரியர் விவேகா சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றிலும் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe