முன்னாள் படைவீரர்களுக்கு சொத்துவரி குறித்தான ஓர் அறிவிப்பு...

published 6 months ago

முன்னாள் படைவீரர்களுக்கு சொத்துவரி குறித்தான ஓர் அறிவிப்பு...

கோவை: தமிழ்நாட்டைச் சார்ந்தமுன்னாள் படைவீரர்கள் தாங்கள் குடியிருக்கும் ஒரு சொந்த வீட்டிற்கு செலுத்தும் சொத்துவரி முன்னாள் படைவீரர் நலத்துறை மூலமாக மீளபெற்றிட ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தின்படி முன்னாள் படைவீரர் செலுத்தும் வீட்டுவரி ஒரு வருடத்திற்கு (2அரையாண்டு) அதிகபட்சமாக ரூ.10,000/- அல்லது செலுத்தப்பட்ட தொகை இதில் எந்ததொகை குறைவோ அந்த தொகையினை, வீட்டுவரி செலுத்திய நாள் முதல் 06 மாத காலத்திற்குள் கீழ்கண்ட விதிகளின் படி ஈடு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

1. முன்னாள் படைவீரர் தமிழ்நாட்டில் நிரந்தரமாக குடியிருப்பவராக இருத்தல் வேண்டும்.

2. முன்னாள் படைவீரரின் சொந்தவீட்டிற்கு அவர்களின் சொந்த பயன்பாட்டில் குடியிருப்பாக பயன்படுத்தப்படும் ஒருவீட்டிற்கு மட்டும்.

3. முன்னாள் படைவீரர் வருமானவரி செலுத்துபவராக இருத்தல் கூடாது.

4.இராணுவபணியிலிருந்து ஓய்வுபெற்ற பின் மறு வேலைவாய்ப்பு (Re-employment) முறையில் தமிழ்நாடு அரசுதுறைகள்/ ஒன்றிய அரசுபணிகள்,ஒன்றிய / மாநில பொதுத்துறை நிறுவனங்களில் (Public Sector Under takings) நிரந்தரமாக பணிபுரிபவர்கள் மற்றும் இந்த மறுவேலைவாய்ப்பு பணியில் இருந்து ஓய்வூதியம் பெறுபவர்களாக இருத்தல் கூடாது.

5. வீட்டுவரி செலுத்தப்படும் வீடு முன்னாள் படைவீரரின் பெயரில் மட்டுமே இருத்தல் வேண்டும்.

6. அரசாணை வெளியிடப்பட்ட நாளான 27.02.2024-க்கு பிறகு 2023-24- ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டிற்கு செலுத்திய வீட்டுவரி முதல் மீளப்பெற்று கொள்ளலாம்.

எனவே தகுதியுடைய முன்னாள் படைவீரர்கள் செலுத்திய வீட்டுவரி தொகையினை மீளபெறுதல் வேண்டி வீட்டுவரி செலுத்திய அசல் இரசீதுடன்,அசல் படைவிலகல் சான்று, அடையாளஅட்டை, ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தக முதல் பக்கநகலுடன் நேரில் வந்து உரிய படிவத்தினை
பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்
கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe