த்ரிஷா நடித்த 'பிருந்தா' வெப் தொடர்... ஓ.டி.டி.,யில் வெளியானது!

published 6 months ago

த்ரிஷா நடித்த 'பிருந்தா' வெப் தொடர்... ஓ.டி.டி.,யில் வெளியானது!

த்ரிஷா நடித்துள்ள பிருந்தா எனும் வெப் தொடர்  ஓ.டி.டி.,யில் வெளியாகியுள்ளது.

முன்னணி நட்சத்திர கதாநாயகியாக வலம் வருபவர்  நடிகை த்ரிஷா. தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே  வைத்துள்ளார். கடந்த 22 வருடங்களாக திரை துறையில் பயணம் செய்து வருகிறார். இவர் ஏரளமான படங்களில் நடித்துள்ளார். பல முன்னணி நடிகர்களுடன்  ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

Brinda OTT Release Date, Platform, Cast: SonyLIV Releases Trailer Of Trisha  Krishnan Series- When & Where To Watch - Filmibeat

கடந்தாண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து  ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.  தொடர்ந்து லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இந்த இரண்டு படமும் மாபெரும் வெற்றியை பெற்றது. தற்போது  தக் லைஃப் , விடா முயற்சி , கோட் ஆகிய டாப் படங்களில் நடித்து வருகிறார்.

Trisha's OTT Gamble Brinda: Hit Or Miss?

இவர் சூர்யா மனோஜ் வாங்கலா இயக்கிய வெப் தொடர் ஒன்றில்  நடித்துள்ளார்.  பிருந்தா என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் த்ரிஷா போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். த்ரிஷா, ஓடிடி தொடரில் நடிப்பது இதுவே முதல்முறை ஆகும். சஸ்பன்ஸ் திரில்லர் கதைக்களத்துடன் இந்த தொடர் அமைந்துள்ளது.

Brinda OTT Release Date: Here's when and where to stream Trisha Krishnan's  upcoming web-series

இந்த தொடரில் இந்திரஜித் சுகுமாரன், ஜெய பிரகாஷ், மணி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, ராகேந்து மவுலி  நடித்துள்ளனர்.  இந்த நிலையில், இந்தத் தொடர் சோனி லைவ் ஓ.டி.டி., தளத்தில் வெளியாகி உள்ளது. இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ், மராத்தி, பெங்காலி மொழிகளில் நேற்று வெளியாகி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe