இன்று கோவை மேயர் தேர்தல்!

published 6 months ago

இன்று கோவை மேயர் தேர்தல்!

கோவை: கோவை மாநகராட்சி மேயருக்கான மறைமுகத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.

கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயரான கல்பனா தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல் நலத்தை காரணம் காட்டி அவர் கடிதம் அளித்த நிலையில், அவரது ராஜினாமா கடிதத்தை கோவை மாநகராட்சி ஏற்றது.

இந்த நிலையில் மாநகராட்சி மேயர் தேர்தல் இன்று நடைபெறும் என்று தி.மு.க மேயர் வேட்பாளராக ரங்கநாயகி போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. கணபதிபுதூர் பகுதியை சேர்ந்த இவர், 29 வது வார்டு மாமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

இன்று காலை 10 மணிக்கு நல்லாயன் மண்டபத்தில் மேயரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.

கோவை மேயர் போட்டிக்கு கடும் போட்டி நிலவி வந்த நிலையில், இன்று யாரேனும் போட்டிக்காக மனு தாக்கல் செய்துவிடுவார்களோ என தி.மு.க தலைமை கலக்கத்தில் உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe