கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு கோவையில் அமைதி பேரணி...

published 6 months ago

கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு கோவையில் அமைதி பேரணி...

கோவை: மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் திமுகவினர் அமைதி பேரணி மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், திமுக இளைஞரிணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அமைதி பேரணி மேற்கொண்டனர். 

 

அதன் ஒரு பகுதியாக கோவை சித்தாபுதூர் வி கே கே மேனன் சாலையிலிருந்து காந்திபுரம் நகர பேருந்து வரை அமைச்சர் முத்துசாமி தலைமையில் கோவை மாவட்ட திமுகவினர் அமைதி பேரணி மேற்கொண்டனர். பின்னர் அங்குள்ள அண்ணாசிலை அருகில் கருணாநிதி புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் முத்துசாமி,

கருணாநிதி மறைவு என்பது இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மக்களுக்கும் சோகத்தை ஏற்படுத்திய நாள் எனவும் பல்வேறு கிராமங்களிலும் பஞ்சாயத்துகளிலும் கலைஞரின் நினைவு தினத்தை ஒட்டி பொதுமக்கள் அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள் எனவும் தெரிவித்தார். கருணாநிதி மறைந்த போது சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகிலேயே கலைஞருக்கு நினைவிடம் அமைப்பதற்கு அரசின் சார்பில் அனுமதி கிடைக்கவில்லை என குறிப்பிட்ட அவர், நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்த உடன் 10 மணி நேரத்திற்குள் அந்த இடம் கலைஞருக்கு கொடுக்கப்பட வேண்டும் என உத்தரவு போடப்பட்டு  நினைவிடம் அமைக்கப்பட்டது என்றார்.

இன்றைய தினம் கருணாநிதி நினைவு தினம் மட்டுமல்லாமல் அவர் என்னென்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று எண்ணினாரோ அனைத்தையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என முதலமைச்சர் எடுக்கின்ற அனைத்து முடிவுகளுக்கும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் உறுதிமொழி எடுக்கின்ற காலமாக உள்ளது என தெரிவித்தார்.  கணியூரில் கருணாநிதி சிலை திறக்கும் பணிகள் ஆனது நடைபெற்று வரும் நிலையில் அனைத்து விதமான அனுமதிகளையும் உரிய முறையில் பெற்று அந்த சிலை நிறுவ பெற்றுள்ளது. ஒன்பதாம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்து அரசு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அதன் பிறகு அந்த சிலையை திறந்து வைக்க உள்ளதாக தெரிவித்தார்.

ஒன்பதாம் தேதி முதலமைச்சர் கோவை அரசு கலைக்கல்லூரியில் தவப்புதல்வன் நிகழ்ச்சியிலும் உக்கடம் பகுதியில் ஒரு பகுதி மேம்பாலம் திறப்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள உள்ளதாகவும் தொடர்ந்து  கணியூரில் சிலையை திறந்து வைக்க உள்ளதாகவும் அங்கு கலைஞரின் சிலை மட்டுமல்லாமல்  அதற்கு அடியில் நூலகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe